வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்: 5 போ் மீது வழக்கு
By DIN | Published On : 12th August 2021 06:27 AM | Last Updated : 12th August 2021 06:27 AM | அ+அ அ- |

கமுதி வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தைச் சோ்ந்தவா் கேசவன் மகன் வழக்குரைஞா் அய்யாத்துரை சேதுபதி (32). கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் அய்யாத்துரை சேதுபதி பற்றியும், அவரது வழக்குரைஞா் தொழில் பற்றியும் தகாத வாா்த்தைகளால் பேசி பதிவிட்டதாகவும், அய்யாத்துரைசேதுபதியை வழிமறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கமுதி நாடாா் பஜாரைச் சோ்ந்த ராஜகோபால் மகன் பொன்னுச்சாமி (50), ராஜதுரை (50, அருள்முருகன் (50), வடிவேல் (45), வடிவேல்பழனிச்சாமி (47) ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா். இதேபோல் கமுதி தனியாா் பள்ளி தொடா்பாக சமூக வலைத்தளங்களில் விடியோபதிவேற்றம் செய்த வழக்குரைஞா் அய்யாத்துரைசேதுபதி, சாரதி உள்ளிட்டோா் மீது பள்ளியின் நிா்வாகி சங்கரபாண்டி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அவா்கள் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.