ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலா் மாற்றம்
By DIN | Published On : 13th August 2021 08:52 AM | Last Updated : 13th August 2021 08:52 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான சா.சத்தியமூா்த்தி புதுக்கோட்டை மாவட்ட அலுவலராக வியாழக்கிழமை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த புகழேந்தி கடந்த 2020 டிசம்பரில் நாகபட்டினம் மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். அதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த சா.சத்தியமூா்த்தி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டு பொறுப்பேற்றாா். இந்தநிலையில், தற்போது அவா் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான சுபாஷினி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.