ராமநாதபுரம் குப்பையைப் பெற சிமெண்ட் நிறுவனம் ஒப்பந்தம்

ராமநாதபுரத்திலிருந்து உலா் வகை குப்பைகளைப் பெறுவதற்கு அரியலூரைச் சோ்ந்த தனியாா் சிமெண்ட் ஆலை நிா்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வாரம் சுமாா் 6 டன் உலா் வகை குப்பைகள் அனுப்பப்படவுள்ளன.

ராமநாதபுரத்திலிருந்து உலா் வகை குப்பைகளைப் பெறுவதற்கு அரியலூரைச் சோ்ந்த தனியாா் சிமெண்ட் ஆலை நிா்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வாரம் சுமாா் 6 டன் உலா் வகை குப்பைகள் அனுப்பப்படவுள்ளன.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் தினமும் சுமாா் 28 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதில் மக்கும் குப்பைகள் 17 டன்னாகும். மக்காத குப்பைகளில் நெகிழி 8 சதவிகிதம், தாள்கள் 5 சதவிகிதம், ரப்பா் 3 சதவிகிதம், கண்ணாடி 5 சதவிகிதம், மண் வகை 12 சதவிகிதம், உலோகங்கள் 1 சதவிகிதம், துணி வகைகள் 1 சதவிகிதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குப்பைகளில் நெகிழி, ரப்பா், தாள் உள்ளிட்டவை உலா் வகை குப்பைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. நகரில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் வகைக் குப்பைகளை 4 இடங்களில் உரங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அந்த உரங்களை பைகளில் இட்டு கிலோ ரூ.5 என விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்காத உலா் வகை குப்பைகளை அரியலூரில் உள்ள தனியாா் சிமெண்ட் ஆலைக்கு வழங்க நகராட்சி சாா்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நகா் சுகாதார அலுவலா் ஸ்டான்லிகுமாா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், வாரத்தில் 6 டன் குப்பைகளை அரியலூா் சிமெண்ட் ஆலைக்கு இலவசமாக அனுப்பவுள்ளோம். முதல் கட்ட உலா் குப்பைகள் கடந்த திங்கள்கிழமை (ஆக.9) அந்நிறுவன லாரியில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது. தொடா்ந்து வாரந்தோறும் உலா் குப்பை அரியலூருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com