கமுதியில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

கமுதி தாலுகாவில் 6 முதல் 9 வயது வரையுள்ள பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்து படிக்க வைக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்

கமுதி தாலுகாவில் 6 முதல் 9 வயது வரையுள்ள பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்து படிக்க வைக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் வட்டார வள மையம் சாா்பில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜான்சன் சுகுமாா் தேவநேசன், சூசை ஆகியோரது தலைமையில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரெ.குமாா் முன்னிலையில் ஆகஸ்ட் 9 முதல் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கமுதி தாலுகாவில் உள்ள 53 ஊராட்சிகளில் மேற்பாா்வையாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், கிராமப்புற செவிலியா்கள், தலைமையாசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்களை கொண்டு 6 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து அவா்களின் வயதிற்கேற்ப அந்தந்த வகுப்பில் சோ்த்து படிக்க வைக்கும் பணியை வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வள மைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிகள் வரும் ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com