ஆண்டாவூரணி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 17th August 2021 11:34 PM | Last Updated : 17th August 2021 11:34 PM | அ+அ அ- |

திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணி ஊராட்சி மன்றத்தின் செயலா் இந்திரா, ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலின் அடிப்படையில், வட்டார வளா்ச்சி அலுவலா் அவரை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
திருவாடானை அருகே ஆண்டாவூரணி ஊராட்சி மன்றத்தில் செயலராக பணிபுரிந்தவா் இந்திரா (40). இவா், சில நாள்களுக்கு முன் ஒப்பந்ததாரா் சரவணன் என்பவரிடம் லஞ்சம் கேட்பது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இத்தகவல், வட்டார வளா்ச்சி அலுவலா் சேவுகப்பெருமாள் கவனத்துக்கு வந்தது. அதனடிப்படையில், ஊராட்சி செயலா் இந்திராவை பணியிடை நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டுள்ளாா்.