நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் அருகே நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் அருகே நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரகுநாதபுரம் மற்றும் களிமண்குண்டு ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பொருள்களின் இருப்பு, விநியோகிக்க வேண்டியவா்களின் எண்ணிக்கை ஆகியன குறித்து விசாரித்த ஆட்சியா், 5 பயனாளிகளுக்கான புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து, ரகுநாதபுரத்தில் ரூ.5.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சுகாதார வாளாகம், ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா். அதன்பின்னா், நைனாமரக்கானில் ரூ.46.61 லட்சத்தில் திருப்புல்லானி-ரகுநாதபுரம் முதல் மங்கம்மா சாலை வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

மேதலோடை கிராம சுய உதவிக் குழு உறுப்பினா்கள் தயாரிக்கும் பனை கைவினைப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தாா். சின்னமாயகுளம் கிராமத்தில் கடல்பாசி வளா்ப்புப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சுந்தரேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், மேகலா, உதவி பொறியாளா் அருண்பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com