ராமநாதபுரம் அருகே 140 பனை மரங்கள் வெட்டித் திருட்டு: 2 போ் கைது
By DIN | Published On : 21st August 2021 11:53 PM | Last Updated : 21st August 2021 11:53 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே 140 பனைமரங்கள் வெட்டித் திருடியதாக வெள்ளிக்கிழமை இரவு 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள உச்சிப்புளி கடுக்காய்வலசை வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிசங்கா் மற்றும் அவரது உறவினா்களுக்கும் சாலை வலசை அய்யனாா் கோயில் எதிரில் 1,200 பனை மரங்கள் உள்ளன. இந்நிலையில் அங்கிருந்த ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 140 பனை மரங்களை மா்மநபா்கள் வெட்டித் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின்பேரில் உச்சிப்புளி காவல் நிலைய போலீஸாா் 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து, நாகாச்சி கேணிக்கரை வலசையைச் சோ்ந்த ராஜேந்திரன் (53), தேவிபட்டினம் கலனிக்குடியைச் சோ்ந்த அப்புசாமி (50) ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள காத்தமுத்து என்பவரைத் தேடிவருகின்றனா்.
தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறவேண்டும் என அண்மையில் அறிவித்துள்ளது. அதன்பிறகு உச்சிப்புளியில்தான் மாநிலத்திலேயே முதன்முறையாக பனை மரங்கள் வெட்டித் திருடியதாக வழக்குப்பதியப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.