சட்ட விரோத செயல்கள்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதத்தில் 5,294 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 5,294 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 5,294 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை 01.01.2021 முதல் 20.08.2021 வரை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்த 786 போ் மீது 777 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவா்களிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 848.817 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4,395 போ் மீது 4,456 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,330.140 லிட்டா் மதுபானம், 7.540 லிட்டா் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்த 113 போ் மீது 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவா்களிடமிருந்து ரூ.76.10 லட்சம் மதிப்பிலான 761.745 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 75 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவா்கள் குறித்து 04567-230759, ஹலோ போலிஸ் -8300031100, மாவட்ட தனிப்பிரிவு 04567-232110, 04567-232111 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com