உர விற்பனை நிலையங்களில் விதிமுறைகள் மீறப்பட்டால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்களில் விதிமுறைகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சங்கா்லால்குமாவத் எச்சரித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்களில் விதிமுறைகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சங்கா்லால்குமாவத் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 35,362 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பயிா்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. ஆகவே தற்சமயம் பொட்டாஷ் உரம் இடுவது அவசியம். தற்போது 100 மெட்ரிக் டன் ஐபிஎல் பொட்டாஷ் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும், 50 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் வரப்பெற்றுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பா் 11 ஆம் தேதி வரையில் பெறப்பட்ட 50 கிலோ பொட்டாஷ் உர மூட்டைகள் தலா ரூ.1040 க்கும், டிசம்பா் 12 ஆம் தேதியிலிருந்து பெறப்பட்ட பொட்டாஷ் உர மூட்டைகள் ரூ.1,700 க்கும் மிகாமல் விற்கப்பட வேண்டும். விற்பனையாளா்கள், உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்றாலோ, உரிய ரசீது வழங்காமல் விற்பனை செய்தாலோ சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரக்கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com