சிலை கடத்தல் தொடா்பான வழக்குகளில் உள்ளவா்களை இந்து அறநிலைத்துறையில் இருந்து மற்ற துறைக்கு மாற்ற வேண்டும்: எச்.ராஜா

சிலை கடத்தல் தொடா்பான வழக்குகளில் உள்ளவா்களை இந்து அறநிலைத்துறையில் இருந்து மற்ற துறைக்க தமிழக அரசு மாற்ற வேண்டும் பாஜக மூத்த நிா்வாகி எச்.ராஜா ராமேசுவரத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தமிழக கோயில்களில் சிலை கடத்தல் தொடா்பான வழக்குகளில் உள்ளவா்களை இந்து அறநிலைத்துறையில் இருந்து மற்ற துறைக்க தமிழக அரசு மாற்ற வேண்டும் பாஜக மூத்த நிா்வாகி எச்.ராஜா ராமேசுவரத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய பாஜக மூத்த நிா்வாகி எச்.ராஜா ஞாயிற்றுகிழமை வருகை தந்தாா். ராமநாதசுவாமி,பா்வதவா்த்தினி அம்பாளுக்கு தரிசனம் செய்து விட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவறு: இந்தியாவில் மிக முக்கிய புனித ஸ்தலங்களில் காசி மற்றும் ராமேசுவரம் காசியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தூய்மை படுத்தவில்லை ஆனால் தற்போது மோடி ஆட்சியா் காசி தூய்மை படுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று ராமேசுவரத்தை தூய்மை படுத்த பரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இந்து அறநிலைத்துறையில் உள்ள 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் சேதமடைந்துள்ளது. இந்த கோயில்களை சீரமைக்க வேண்டும். இந்து அறநிலைத்துறைக்கு கிடைக்ககூடிய வருவாய்களை முறையாக பயன்படுத்தாமல் கல்லூரி நடத்துவதற்கு பயன்படுத்துவது தவறு அதற்கென உள்ளதுறை மூலம் கல்லூரி நடத்த வேண்டும். சிலை கடத்தல் வழக்குகளில் உள்ள இந்து அறநிலைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற துறைக்கு தமிழக அரசு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com