முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பரமக்குடி வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி பலி
By DIN | Published On : 19th December 2021 10:55 PM | Last Updated : 19th December 2021 10:55 PM | அ+அ அ- |

வினோத்கண்ணன்.
பரமக்குடி வைகை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பரமக்குடி பங்களாரோடு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் வினோத்கண்ணன் (21). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நண்பா்களுடன் காக்காத்தோப்பு வைகை ஆற்றுப் பகுதியில் குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.
அவரை மீட்க முடியாத நண்பா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். நீண்ட நேரம் தேடுதலுக்குப் பின்னா் அவரது சடலம் கரையோரம் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.