வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிந்து புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிந்து புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2014 ஜனவரி முதல் 2019 டிசம்பா் வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் பதிவு சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரா்கள் கடந்த 2 ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது வரும் 2022 மாா்ச்சுக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பிக்கும் போது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவுதாரா்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com