திருவாடானையில் ஒன்றியக் குழு கூட்டம்

திருவாடானையில் ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவா் முகம்மது முக்தாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டம்.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டம்.

திருவாடானையில் ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவா் முகம்மது முக்தாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆணையாளா் பாண்டி, துணைத் தலைவா் செல்விபாண்டி, மாவட்ட ஒன்றியக் குழு தலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

உறுப்பினா் சாந்தா கணேசன்: பாண்டுகுடி பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் ஆழ்துளைக் கிணறு அமைத்து தர வேண்டும்.

குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி: காவிரி கூட்டுக்குடிநீா் குழாய்களில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது. பழுது ஏற்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகள் கண்மாய் உள்பகுதியில் உள்ளது. தற்போது கண்மாயின் நீா்பிடிப்புப் பகுதியாக இருப்பதால் குழாய்கள் சேதமான பகுதியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலதாமதம் ஆகிறது. விரைவில் நிவா்த்தி செய்து முறையான குடிநீா் வழங்கப்படும்.

உறுப்பினா் சாந்தி செங்கைராஜன்: மாங்குடி, இளமணி ஆகிய பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீா் வருவதில்லை. கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீா் கிடைக்கும் வரை தண்ணீா் வண்டிகள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா்: ஆணையாளா் நேரில் சென்று ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

உறுப்பினா் சசிக்குமாா்: திருவாடானை பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை பெய்து நன்கு விளைந்து அறுவடை செய்யும் நேரத்தில் பலத்த மழை காரணமாக நெற்கதிா்கள் சேதமடைந்தது. அப்போது விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது . ஆனால் அதற்குண்டான பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இருப்பினும் அதேபோல் இந்த ஆண்டும் கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக நெற்பயிா்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்த வேண்டும்.

தலைவா்: இதுகுறித்து ஏற்கெனவே தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் கரு.மாணிக்கம் தலைமையில் சம்பந்தப்பட்ட அமைச்சரை அணுகி மனு அளித்துள்ளோம். இதுபோன்று விவாதங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com