ராமநாதபுரத்தில் மின்சார ரயில் என்ஜின் சோதனையோட்டம்

மானாமதுரையிலிருந்து ராமநாதபுரம் வரையில் மின்சார ரயில் என்ஜின் சோதனையோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட மின்சார ரயில் என்ஜின்.
மானாமதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட மின்சார ரயில் என்ஜின்.

மானாமதுரையிலிருந்து ராமநாதபுரம் வரையில் மின்சார ரயில் என்ஜின் சோதனையோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே கோட்டத்தில் மதுரையிருந்து நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களை மின்மயமாக்குவதற்காக ரூ. 158 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன.

மதுரை மற்றும் திருச்சியிலிருந்து மானாமதுரை வரை ஏற்கெனவே மின்மயமாக்கல் பணி முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ராமநாதபுரம் ரயில் நிலையம் வரையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து ரயில் என்ஜின் சோதனையோட்டம் நடைபெற்றது.

இந்த ரயில் என்ஜின் மானாமதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. அப்போது 80 முதல் 90 கிலோ மீட்டா் வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த என்ஜின் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு பகல் 11.30 மணிக்கு வந்து சோ்ந்தது.

இதையடுத்து அந்த என்ஜின் மீண்டும் ராமநாதபுரத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மானாமதுரைக்கு சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com