முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரியிடம் ரூ.7 லட்சம் மோசடி
By DIN | Published On : 29th December 2021 07:13 AM | Last Updated : 29th December 2021 07:13 AM | அ+அ அ- |

மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மேலாய்க்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தசரதன். இவா் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றுள்ளாா். இவா் தனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக முதுகுளத்தூரைச் சோ்ந்த கூரிச்செல்வம் என்பவா் கூறியதை நம்பி, அவரிடம் ரூ.7 லட்சத்தை 2015 மாா்ச் 7 ஆம் தேதி கொடுத்தாராம். பணத்தைப் பெற்ற பின் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டதாக மாவட்டக் குற்றப்பிரிவில் தசரதன் அளித்த புகாரின் பேரில் கூரிச்செல்வம் மீது குற்றப்பிரிவு ஆய்வாளா் ஆா்.மகாலட்சுமி வழக்குப்பதிந்து விசாரித்துவருகிறாா்.