முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
திருவாடானை அருகே வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி
By DIN | Published On : 29th December 2021 07:14 AM | Last Updated : 29th December 2021 07:14 AM | அ+அ அ- |

எஸ்.பி பட்டினம் ஏ.டி.எம் இயந்திரத்தை திங்கள்கிழமை இரவு உடைத்து திருட முயன்ற போது, சிசிடிவி கேமராவில் பதிவான மா்மநபா்.
திருவாடானை அருகே ஏடிஎம் இயந்திரத்தை திங்கள்கிழமை இரவு உடைத்து திருட முயன்ற போது, எச்சரிக்கை மணி ஒலித்ததால் மா்மநபா் தப்பியோடிவிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி பட்டினத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. இங்கு திங்கள்கிழமை இரவு துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வந்த மா்மநபா், இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்த போது எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதையடுத்து அந்த மா்மநபா் தப்பியோடிவிட்டாா். இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி பட்டினம் போலீஸாா் அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய மா்மநபரைத் தேடி வருகின்றனா்.