முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
வங்கி மேலாளா் போல நடித்து பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி
By DIN | Published On : 29th December 2021 07:15 AM | Last Updated : 29th December 2021 07:15 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலத்தில் வங்கிக் கிளை மேலாளா் என அறிமுகமான நபா் பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை மோசடியாக பெற்றுச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள செட்டியமடை கிராமத்தை சோ்ந்த மாரி மனைவி வசந்தி(42). இவரது கைப்பேசிக்கு திங்கள்கிழமை மாலை தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை மேலாளா் என்றும், தனது பெயா் குமாா் என்றும் தெரிவித்துள்ளாா். தங்களது வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால் 20 சதவீதம் வட்டி தருவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதை நம்பி வசந்தி செவ்வாய்க்கிழமை தான் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை, நேரில் வந்த போலி கிளை மேலாளரிடம் கொடுத்துள்ளாா்.
பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபா், சிறிது நேரத்தில் ரசீது தருவதாகக் கூறிச் சென்றவா் தலைமறைவானாா். இது குறித்து வசந்தி அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.