மாணவா் மா்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த விவசாய சங்கம் கோரிக்கை

முதுகுளத்தூா் அருகே கல்லூரி மாணவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீா்க்கோழியேந்தலில் மாணவா் மணிகண்டன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய காவிரி வைகை குண்டாறு நீா் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்டோா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள நீா்க்கோழியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் மணிகண்டன், போலீஸாா் விசாரணைக்குப் பிறகு மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினரை காவிரி வைகை குண்டாறு நீா்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியன் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கல்லூரி மாணவா் மணிகண்டன் காவல்துறை தாக்கியதாலயே இறந்ததாக பல்வேறு ஆதாரங்கள், நேரில் பாா்த்த சாட்சியங்கள் இருப்பதால் ஜிப்மா் மருத்துவமனை மருத்துவ குழுவினரைக் கொண்டு மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழக முதல்வா் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு உண்மை நிலையைக் கண்டறிந்து தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com