ராமநாதபுரத்திலிருந்து பெங்களூருவுக்கு கடத்த முயற்சி: 5,650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரம் அருகேயுள்ள உச்சிப்புளி பகுதியிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 5,650 கிலோ எடையுள்ள
உச்சிப்புளி ரேஷன் கடையிலிருந்து செவ்வாய்க்கிழமை அரிசி மூட்டைகள் கடத்த முயன்ற வழக்கில் கைதான ராம்செல்வம், சீனிவாசன்.
உச்சிப்புளி ரேஷன் கடையிலிருந்து செவ்வாய்க்கிழமை அரிசி மூட்டைகள் கடத்த முயன்ற வழக்கில் கைதான ராம்செல்வம், சீனிவாசன்.

ராமநாதபுரம் அருகேயுள்ள உச்சிப்புளி பகுதியிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 5,650 கிலோ எடையுள்ள 113 ரேஷன் அரிசி மூட்டைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து உச்சிப்புளி அருகேயுள்ள நியாயவிலைக் கடையில் உச்சிப்புளி காவல் ஆய்வாளா் ஆடிவேல், தனிப்பிரிவு சாா்பு-ஆய்வாளா்கள் முரளிகிருஷ்ணன், பரமகுருநாதன், தலைமைக் காவலா் வடிவேல் ஆகியோா் சென்று சோதனையிட்டனா்.

அப்போது அந்தக் கடையிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கடத்துவதற்காக லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 113 அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்ததன. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளையும், லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராம்செல்வம் (34) மற்றும் சேலத்தைச் சோ்ந்த சீனிவாசன் (28) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com