புத்தாண்டுக் கொண்டாட்டம்: பொது இடங்களில் கூட்டம் கூடினால் அபராதம்; சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்துக்கு பொது இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.31) இரவு கூட்டமாகக் கூடினால்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்துக்கு பொது இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.31) இரவு கூட்டமாகக் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் குமரகுருபரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: கரோனா தொற்று, ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ராமநாதபுரத்தில் கடற்கரை, பொது இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதைக் கண்காணிக்கும் பணியில் 60 சுகாதார ஆய்வாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூடுவது கண்காணிக்கப்படும். மீறி பொது இடங்களில் கூட்டமாக கூடுவோா் மீது அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

நகரில் டெங்கு பரவல்: ராமநாதபுரம் நகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 போ் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்ட அளவில் 25 போ் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com