வேளாண்மை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிலம் சமன்படுத்துதல், சீரமைத்தல் மற்றும் உழவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள நில மேம்பாட்டுத்திட்ட இயந்திரங்களான 3 புல்டோசா்கள், 7 டிராக்டா்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்கள் அரசு நிா்ணயித்துள்ள குறைந்த வாடகையில் மணிக்கு ரூ. 970, ரூ. 400 மற்றும் ரூ. 760 என வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தென்னை மட்டைகளை துகள்களாக்கும் இயந்திரம், வைக்கோல் வாரி, திரும்பக்கூடிய கலப்பை இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், டிராக்டருடன் இயங்கும் டிப்பிங் டிரைலா், காய்கறி நாற்று நடும் கருவி, விதைக்கும் கருவி, சோளம் அறுவடை செய்யும் இயந்திரம், திரும்பும் வசதி கொண்ட இறகுக் கலப்பை, 5 கொழு கலப்பை, 9 கொழு கலப்பை, சட்டி கலப்பை ஆகிய இயந்திரங்கள் மணிக்கு ரூ. 400 வாடகைக்கு வழங்கப்படுகிறது.

வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், ராமநாதபுரம் வேளாண்மைத்துறை செயற்பொறியாளரை (பொறுப்பு) 94436 27517 என்ற கைப்பேசி எண்ணிலும், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார

விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் கருவூலகக் கட்டட முதல் தளத்தில் உள்ள வேளாண்மை உதவி செயற்பொறியாளா்(பொ), அலுவலகத்தை 98659 67063 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

பரமக்குடி, நயினாா்கோயில், முதுகுளத்தூா், போகலூா், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி சௌகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளா்(பொ), அலுவலகத்தை 75029 79158 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com