முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
By DIN | Published On : 31st December 2021 08:50 AM | Last Updated : 31st December 2021 08:50 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், 73 பயனாளிகளுக்கு ரூ.24.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், குழந்தை பாதுகாப்பு அலகின் சாா்பில் கரோனாவால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கான உத்தரவையும், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பேசியதாவது:
ராமநாதபுரத்தில் 31,297 மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனா். அவா்களில் 22,174 போ் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனா். மனவளா்ச்சி குன்றியோா் உள்ளிட்டோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக 4,715 பேருக்கு ரூ.6.44 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்துகள் வாங்குவது தொடா்பாக, நீதிமன்றம் உத்தரவுபடி அத்திட்டம் செயல்படுத்தப்படும் எனறாா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), செ. முருகேசன் (பரமக்குடி), கூடுதல் ஆட்சியா் வளா்ச்சி கே.ஜே. பிரவீண்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம. காமாட்சி கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் உ. திசைவீரன், துணைத் தலைவா் வி. வேலுச்சாமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் து. கதிா்வேலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.