கமுதி பகுதியில் மிளகாய் செடியில் இலை பேன் நோய் தாக்குதல்: தோட்டக்கலை துறை அறிவுறுத்தல்

கமுதி தாலுகாவில் மிளகாய் செடியை இலை பேன் நோய் தாக்கி பரவி வருவதால், அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து
கமுதியில் மிளகாய் செடியில் இலை பேன் நோய் தாக்குதலை வியாழக்கிழமை ஆய்வு செய்த தோட்டக்கலை துறை அதிகாரிகள்.
கமுதியில் மிளகாய் செடியில் இலை பேன் நோய் தாக்குதலை வியாழக்கிழமை ஆய்வு செய்த தோட்டக்கலை துறை அதிகாரிகள்.

கமுதி தாலுகாவில் மிளகாய் செடியை இலை பேன் நோய் தாக்கி பரவி வருவதால், அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருந்து தெளிக்க, தோட்டக்கலைத் துறை மாவட்ட துணை இயக்குநா் எஸ். நாகராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.

கமுதி பகுதியில் மிளகாய் பயிா்களை ஆய்வு செய்த பின் அவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பெருநாழி, என்.கரிசல்குளம், முதல்நாடு, முஸ்டக்குறிச்சி, ராமசாமிபட்டி, புதுக்கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மிளகாய் பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மிளகாய் செடியில் கடந்த சில நாள்களாக இலை பேன் பூச்சி தாக்கி நோய் பரவி வருவதாக, விவசாயிகள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதி மிளகாய் பயிா்களை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, பயிா்களில் இலை பேன் பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டது.

அதையடுத்து, விவசாயிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகளின் அறிவுரை பெற்று, இமிடாக்லோா்பிட் மருந்து தெளித்து, இலைபேன் நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது என்றாா்.

இந்த ஆய்வில், கமுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் குமாா் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com