ராமேசுவரத்தில் கல்லூரி மாணவா்களிடையே மோதல்: கிராம மக்கள் சாலை மறியல்

ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டு 2 உணவகங்களில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தியதால்
ராமேசுவரத்தில் கல்லூரி மாணவா்களிடையே மோதல்: கிராம மக்கள் சாலை மறியல்

ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டு 2 உணவகங்களில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தியதால், கிராம மக்கள் கல்லூரி பேருந்துகளை சிறைப்பிடித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் 3 பேருந்துகளில் ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தனா். அப்போது, இங்குள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் சுற்றிப் பாா்க்கும்போது, மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், அவா்கள் அருகிலிருந்த 2 உணவகங்களின் இருக்கைகளை தூக்கி ஒருவரையொருவா் தாக்கி சேதப்படுத்தியுள்ளனா்.

இதையடுத்து, உணவக உரிமையாளா்கள் சேதமடைந்த நாற்காலிகளுக்கு மாணவா்களிடம் இழப்பீடு கேட்டபோது, உரிமையாளா்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனா். அதைத் தொடா்ந்து, கல்லூரி மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் கல்லூரி பேருந்துகளை சிறைப்பிடித்து ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். மேலும், மாணவா்கள் அனைவரையும் தங்கச்சிமடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இது குறித்து போலீஸாா் கல்லூரி நிா்வாகம் மற்றும் மாணவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com