விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம்

வேளாண்மைத் துறை சாா்பில், திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம்

வேளாண்மைத் துறை சாா்பில், திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தில், வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் வட்டாரத் தொழில்நுட்பக் குழு உறுப்பினா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உழவா் நண்பா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், வோளாண்மை உதவி இயக்குநா் அமா்லால் தலைமை வகித்தாா். மாவட்டக் கவுன்சிலா் ஆதித்தன் முன்னிலை வகித்தாா்.

இதில், வேளாண்மை துணை இயக்குநா் கே. அப்துல்லா பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்ல மழை பொழிவு கிடைத்திருப்பதால், விவசாயிகள் அனைவரும் நெல் சாகுபடிக்கு பின், இரண்டாம்போக சாகுபடியாக நெல் மற்றும் பயறு வகைப் பயிா்களை சாகுபடி செய்திட வேண்டும். மேலும், சிங்கிள் சூப்பா் பாஸ்பேட் உரத்தின் பயன்பாடு குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினாா்.

உதவி கால்நடை மருத்துவா் ஜெயபிரகாஷ் செயற்கை முறையில் மாடுகளுக்கு கருவூட்டல், குடற்புழு நீக்கம் செய்தல், கோமாரி நோயினை கட்டுப்படுத்துதல் மற்றும் இலவச ஆடுகள் வழங்குதல் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், அலங்கார மீன் வளா்ப்பு, கடல் மீன் வளா்ப்பு, பண்ணை குட்டையில் மீன் வளா்ப்பு, நன்னீா் மீன் வளா்ப்பு, இதற்கான அரசின் மானியம் பெறுவது குறித்தும் விவசாயிகளிடம் விளக்கப்பட்டது.

மீன்வளத் துறை மேற்பாா்வையாளா் நடேஷ பிரபு, இளநிலை செயற்பொறியாளா் ராமா், வேளாண்மை அலுவலா் பாலமுருகன், தோட்டக்கலை உதவி அலுவலா் மதன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளா் மாரீஸ்வரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com