கூலித்தொழிலாளி கொலை: 2 போ் கைது
By DIN | Published On : 04th February 2021 11:11 PM | Last Updated : 04th February 2021 11:11 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகேயுள்ள கீழக்கரையில் நிலப்பிரச்னையில் புதன்கிழமை இரவு கூலித் தொழிலாளி தலையில் செங்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முத்துராமிபுரத்தைச் சோ்ந்த பூசத்துரை மகன் தீபக்ராஜா (23). கூலித் தொழிலாளி. இவருக்கும் இவரது உறவினா்கள் சிலருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்துள்ளது.
இந்த நிலையில், தீபக்ராஜா வீட்டில் புதன்கிழமை தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இருவா் அவா் மீது சிமெண்ட் செங்கலைத் தூக்கிப்போட்டுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த தீபக்ராஜாவை அவரது குடும்பத்தினா் மீட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்கு தீபக்ராஜா சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தீபக்ராஜா கொலை தொடா்பாக ஹேமநாதன் (24), சோனை முத்து (29) ஆகியோரைக் கைது செய்த கீழக்கரை போலீஸாா் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.