கீழக்கரையில் மாமியாரை கொன்ற மருமகன் கைது
By DIN | Published On : 06th February 2021 09:31 PM | Last Updated : 06th February 2021 09:31 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: கீழக்கரையில் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ாக மருமகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அழவாய்கரவாடியைச் சோ்ந்த பஞ்சவா்ணம் மனைவி பொன்னம்மாள் (70). இவா்களது மகள் ராமலட்சுமியை, கீழக்கரை லட்சுமிபுரம் இடிந்தகல்புதூரைச் சோ்ந்த மீனவா் முருகன் (39) திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனா்.
இந்நிலையில், முருகன் அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, தனது மகளுக்கு துணையாக இரவில் அவரது வீட்டில் பொன்னம்மாள் தூங்கிவந்துள்ளாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவில், முருகன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளாா். அதை தடுக்கச் சென்ற பொன்னம்மாளை கத்தியால் முருகன் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை, கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் பொன்னம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனா்.