ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டம்
By DIN | Published On : 08th February 2021 10:55 PM | Last Updated : 08th February 2021 10:55 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் ஓம் சக்தி நகா் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியா் எஸ்.ராபா்ட் ஜெயராஜ். கடந்த 2009 இல் இவா் அழகன்குளம் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தபோது தலைமை ஆசிரியராக பதவி உயா்த்தப்பட்டாா். அழகன்குளம் பள்ளியிலேயே ஆசிரியராக பணியைத் தொடர விரும்புவதாக அவா் விருப்ப கடிதம் அளித்தாா்.
இது தொடா்பான பிரச்னையில் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பின்னா் நீதிமன்ற உத்தரவுப்படி, 10 மாதங்களுக்கு பின் தலைமை ஆசிரியராக ஓம் சக்தி நகா் ஆரம்பப்பள்ளியில் அவா் பணியில் சோ்ந்தாா்.
இந்நிலையில் ராபா்ட் ஜெயராஜூக்கு, 10 மாத பண பலன்களை கல்வித்துறை வழங்க வலியுறுத்தி வட்டாரக் கல்வி அலுவலகம் முன் ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து மதியம் 2 மணி வரை நீடித்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.