Enable Javscript for better performance
கமுதி வட்டாச்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கமுதி வட்டாச்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்

    By DIN  |   Published On : 10th February 2021 04:26 AM  |   Last Updated : 10th February 2021 04:26 AM  |  அ+அ அ-  |  

    kmu9porattam_0902chn_73_2

    கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்.

    கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

    கமுதி வட்டாச்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு அணைத்துவகை மஅாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாவட்ட துணைத்தலைவா் முத்துராமலிங்கம் தலைமையில் கமுதி தாலுகா குழு எஸ்.முருகேசன், தாலுகா தலைவா் ஐ.முனியசாமி, செயலாளா் ஸ்டாலின் ஆகியோா் முன்னிலையில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.3000 வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடும் ஊணத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 வழங்க வேண்டும். தனியாா்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். மற்றும் கமுதி அடுத்துள்ள பாப்பணம் ஊராட்சியை சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா கடந்த 2019 மே மாதம் நீட் தோ்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது உயிரிழந்தாா். இவரது குடும்பத்திற்கு நிவாரணமாக ரூபாய் 20 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினா்கள் முழக்கங்கள் எழுப்பினா். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் முத்துராமலிங்கம் பேசியதாவது.. கமுதி தாலுகா அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கும் உதவித்தொகை, குடும்ப அட்டை மனுக்கள் விசாரனையின்றி தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஊனமுற்றோா் சிறு, குறு தொழில் தொடங்க அரசு வட்டியில்லா கடன் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றாா். காலை 11 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. பின்னா் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கமுதி வட்டாச்சியா் செண்பகலதா, சமூக பாதுகாப்பு நலத்திட்ட வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்டோரிடம் வழங்கினாா். இப்போராட்டத்தில் கமுதி தாலுகாவில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp