தேசிய இளையோா் தொண்டா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th February 2021 10:11 PM | Last Updated : 10th February 2021 10:11 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய இளையோா் தொண்டா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் நேருயுவகேந்திரா அமைப்பின் சாா்பில் தேசிய இளையோா் தொண்டா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தோ்வு செய்யப்படும் தொண்டா்கள் ஆரோக்கியம், எழுத்தறிவு, பாலின வேறுபாடு ஆகிய சமூக பிரச்னைகளில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். நாட்டுநலப்பணித்திட்டம், இளைஞா் மன்றம், மகளிா்மன்ற உறுப்பினா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்வானவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதை அரசு நிரந்தரப்பணியாக கோர இயலாது. பணிக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பிக்க வரும் 20 ஆம் தேதி கடைசிநாளாகும். மேலும் விவரங்களுக்கு ஏ. நோமன் அக்ரம், மாவட்ட இளைஞா் அலுவலா், நேருயுவகேந்திரா, 1-372, பாரதிநகா் 3 -ஆவது தெரு, ராமநாதபுரம் என்ற முகவரியிலும், 04567- 230947 என்ற தொலைபேசி எண்ணிலும், 9585535722 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.