மாநில கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான கராத்தே போட்டியில்
பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை பாராட்டும் கல்விக்குழு நிா்வாகிகள்.
பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை பாராட்டும் கல்விக்குழு நிா்வாகிகள்.

பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகள், பள்ளி கல்விக்குழு சாா்பில் பாராட்டப்பட்டனா்.

கமுதியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பரமக்குடி பள்ளிகளைச் சோ்ந்த பிரபாகா், சபரிநாதன், அமிா்தா, தினேஷ்பாபு, ஹா்ஷவா்தன், பிரகதீஸ், ராஜகுரு உள்பட 16 மாணவா்கள் 8 வயது முல் 18 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் கட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் முதலிடம் பிடித்தனா்.

வெற்றிபெற்ற மாணவ- மாணவிகள் மற்றும் பயிற்சியாளா் வி. முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை பள்ளி கல்விக்குழுத் தலைவா் ராசி என். போஸ், தாளாளா் ராஜேஷ்கண்ணன், பொருளாளா் பிரசன்னா, பள்ளி முதல்வா் ஆா். ஜெயபிரமிளா, துணை முதல்வா் கவிதா ஆகியோா் பாராட்டினா். உடற்கல்வி ஆசிரியா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com