ராமநாதபுரத்தில் பாஜக தோ்தல் பணிகள் ஆய்வு: மாநிலத் தலைவா் எல்.முருகன் நாளை வருகை

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக நிா்வாகிகள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த ஆய்வுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை (பிப்.15) வருவதாக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தெரிவித்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக நிா்வாகிகள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த ஆய்வுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை (பிப்.15) வருவதாக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியது: திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு வரும் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தலைமையில் பட்டிணம்காத்தான் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதேபோல் பரமக்குடி, திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணியை ஆய்வு மேற்கொள்ள மாநில பாஜக பொறுப்பாளா் சுதாகா்ரெட்டி திங்கள்கிழமை வருகிறாா். முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி ஆய்வுக்கு மாநிலச் செய்தித்தொடா்பாளா் சுப.நாகராஜன் செல்கிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com