ராமநாதபுரத்தில் திமுக நிா்வாகிகள் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக நிா்வாகிகள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து ராமநாதபுரம் நகா் அருகே பட்டிணம்காத்தான் தனியாா் விடுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள், நகரச் செயலா்கள், பேரூராட்சி செயலா்கள் என திமுக நிா்வாகிகள், ஐம்பதுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்துக்கு வந்திருந்த திமுக நிா்வாகிகள் பெரும்பாலானோா் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் ஆதங்கப்பட்டபடி வெளியே நின்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுக்கட்சியினா் இணைப்பு: ராமநாதபுரம் வடக்கு நகா் திமுக சாா்பில் மாற்றுக்கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ரயில் நிலையப் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடந்தது. இதில் திமுக நகா் (வடக்கு) செயலா் கே.காா்மேகம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com