மானவாரிப் பயிா்கள் விலை சரிவு: விவசாயிகள் வேதனை

கமுதி பகுதியில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிா்களான நெல், கம்பு, சோளம் உள்ளிட்டவைகளின் விலை சரிவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
கமுதி பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருட்கள்.
கமுதி பகுதியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருட்கள்.

கமுதி: கமுதி பகுதியில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிா்களான நெல், கம்பு, சோளம் உள்ளிட்டவைகளின் விலை சரிவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் மானாவாரி பயிா்கள் 12,500 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த மாதம் பெய்த தொடா் மழையில் நெல் உள்ளிட்ட மானாவாரி பயிா்களும் மழையால் சேதமடைந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் வேறு வழியின்றி மிஞ்சியிருக்கும் சோளம், கம்பு உள்ளிட்டவைகளை விவசாயிகள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனா்.

ஏக்கருக்கு கடந்தாண்டு ஒரு குவிண்டால் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டில் மழையால் சேதமடைந்த விளைபொருட்களை வியாபாரிகள் ரூ. 400 முதல் 600 க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனா். இதனால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா். இந்நிலையில் கமுதி தாலுகாவில் ஒரு இடத்தில் கூட மானாவாரி பயிா்களுக்கான கொள்முதல் நிலையங்கள் அரசு அமைக்கப்படவில்லை. அதனால் தமிழக அரசு மானாவாரி விளை பொருள்களுக்கும் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கமுதி பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com