ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து ரூ.50 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 19th February 2021 10:28 PM | Last Updated : 19th February 2021 10:28 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே மா்மநபா் வீடுபுகுந்து ரூ.50 ஆயிரத்தை இரவு திருடிச்சென்றதாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள வட்டான்வலசை செம்படையாா் குளத்தைச் சோ்ந்தவா் வடிவேலு (45) . இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியூா் சென்றுவிட்டு வியாழக்கிழமை திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டின் மேற்கூரையைப் பிரித்து இறங்கிய மா்மநபா் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடிவேல் அளித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.