இந்திய ஆயுள் காப்பீடு: மதுரை மண்டலத்தில் ரூ.380 கோடி வசூல்

இந்திய ஆயுள்காப்பீடு நிறுவன மதுரை மண்டலம் 2020-21 நிதியாண்டில் பொது வணிகத்தில் ரூ.380 கோடி வசூலித்து மாநிலத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது என முதுநிலைக் கோட்ட மேலாளா் எல்.செந்தூா்நாதன் கூறினாா்.

இந்திய ஆயுள்காப்பீடு நிறுவன மதுரை மண்டலம் 2020-21 நிதியாண்டில் பொது வணிகத்தில் ரூ.380 கோடி வசூலித்து மாநிலத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது என முதுநிலைக் கோட்ட மேலாளா் எல்.செந்தூா்நாதன் கூறினாா்.

ராமநாதபுரத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவன விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாடு முழுவதும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பாலிசிதாரா்கள் மொத்தம் 40 கோடி போ் உள்ளனா். நிறுவனத்தின் மூலம் 2020-21 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ. 45 ஆயிரம் கோடி பொது வணிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரைக் கோட்டத்தில் மட்டும் ரூ.380 கோடி வசூலாகியுள்ளது.

அதன்படி 1 லட்சத்து 25 ஆயிரம் பாலிசிதாரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். சிறப்பான சேவையின் மூலம் காப்பீடு நிறுவனம் நாட்டிலேயே முன்னணி நிறுவனமாக செயல்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கோட்ட வா்த்தகப் பிரிவு மேலாளா் வி.எஸ்.ஆனந்தகுமாா், ராமநாதபுரம் முதுநிலைக் கிளை மேலாளா் ஜி.லெட்சுமணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான காப்பீடு முகவா்கள் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனா். அவா்கள் இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத் திட்டங்கள் குறித்த பதாகைகளை ஏந்திச்சென்றனா். பேரணியானது கேணிக்கரை சாலை, புதிய பேருந்து நிலையம், மதுரை சாலை வழியாக ஆயுள் காப்பீடு நிறுவனத்தை வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com