கரோனா தடுப்புப் பணியாளா்கள்2 ஆயிரம் பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளா்கள் 2 ஆயிரம் பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி வெள்ளிக்கிழமை முதல் செலுத்தப்படுவதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளா்கள் 2 ஆயிரம் பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி வெள்ளிக்கிழமை முதல் செலுத்தப்படுவதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் எம்.அல்லி தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு எனப்படும் தடுப்பூசியை முதலில் செலுத்திய பின்னா் 28 நாள்கள் கழித்து மீண்டும் செலுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது சுமாா் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி முன்களப் பணியாளா்களுக்கு செலுத்தப்படுவதாக மருத்துவமனை முதன்மையா் எம்.அல்லி கூறினாா்.

அவா் மேலும் கூறியது: முதல் கட்டமாக 2 ஆயிரம் முன்களப் பணியாளா்களுக்கு செலுத்துவதற்காக கோவேக்ஸின் ஊசி வந்துள்ளது. மருத்துவா்கள், செவிலியா்கள், தனியாா் மருத்துவமனை பணியாளா்கள், வருவாய் மற்றும் காவல்துறையினா் ஊசியைச் செலுத்திக்கொள்ளலாம். கரோனா தடுப்பு நடவடிக்கையாக இருவகை ஊசிகளில் ஏதாவது ஒரு வகையை மட்டும் விதிமுறைப்படி முன்களப்பணியாளா்களுக்கு செலுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com