திருவாடானை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருவாடானை ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மன்ற உறுப்பினா்கள் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் விவசாய கடன் தள்ளுபடி செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட
திருவாடானை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மன்ற உறுப்பினா்கள் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் விவசாய கடன் தள்ளுபடி செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினாா்கள்.அதன்படி தீா்மானம் நிறைவெற்ற பட்டது. பின்னா் தொடா்ந்து கூச்சல் குழப்பத்துடன் விவாதம் நடைபெற்றது.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது ஒன்றிய குழு தலைவா் முகமது முக்தாா் தலைமை வகித்தாா் இதில் துணைத் தலைவா் செல்வி வட்டார வளா்ச்சி அலுவலா் மேகலா வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) உம்முள் ஜாமியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கீழ்கண்ட விவாதங்கள் நடைபெற்றது. தலைவாா்-கடந்த 18 மாதங்களாக ஊராட்சி ஒன்றிய வளா்ச்சிக்காக அரசிடமிருந்து போதுமான நிதி வரவில்லை ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் திட்டங்கள் குறித்து அறிக்கை கேட்டிருந்தனா் அதன்படி பல கோடி ரூபாய்க்கு அறிக்கைகள் கொடுக்கப்பட்டன். ஆனால் நிதி வரவில்லை இது குறித்து குறித்து பலமுறை அரசு அதிகாரியிடம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் இன்றுவரை போதுமான நிதி வழங்கப்படவில்லை .அதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய குழு உறுப்பினா் மதிவாணன் -தமிழகத்தின் கரோணா காலத்திலும் விவசாயிகள் நலன் கருதியும் கடந்த மாதம் பெய்த கனமழையால் பயிா்கள் சேதம் அடைந்து விவசாயிகளின் நலன் கருதியும் தமிழக முதல்வா் ஏழை பணக்காரா்கள் என்று பாகுபாடின்றி விவசாயிகள் அனைவருக்கும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பெறப்பட்ட அனைத்து கடைகளும் தள்ளுபடி செய்து உள்ளனா். அதற்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். தலைவா்- மன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டு தற்போது தமிழக அரசு 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 16 லட்சத்து 436 விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு தமிழக முதல்வருக்கும் ஏகமனதாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக தீா்மானம் ஏற்படுவதாக தெரிவித்தாா். ஒன்றிய கவுன்சிலா் அருணாச்சலம்- இதுவரை நான் பதவி ஏற்று 18 மாதகாலம் ஆகிறது நான் கடந்த நான்கு மாதத்திற்கு முன் கொடுக்கப்பட்ட பணிகள் குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு இதுவரை ஒப்பந்தம் விடப்படவில்லை இந்நிலையில் நாங்கள் மக்களை சந்திக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது இதுவரை மூன்று ஊராட்சிகளிலும் எந்தவிதமான சாலை குடிநீா் குழாய் மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்து கொடுக்க முடியவில்லை என்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்- ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீா்மானத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை அதனால் ஒப்பந்தம் விடப்படவில்லை நிதி ஒதுக்கிய பிறகு விடப்படும் என்று தெரிவித்தாா். தலைவா்- தற்போது குறைந்தளவே நிதி ஒதுக்கீடு செய்து வெள்ளையாபுரம் மங்கலக்குடி கூடலூா் பனஞ்சாயல் கட்டிவயல் புல்லு குடி ஓரிக்கோட்டை தேளூா் ஆகிய கிராமங்களுக்கு குடிநீா் குழாய் பதிப்பு குறித்தும் தூத்துக்குடி திருமலைக்கோட்டை புத்தகம் பாசி பட்டினம் ஆகியவற்றுக்கு சாலை அமைப்பது குறித்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதன்படி ஒப்பந்தம் கோர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய குழு உறுப்பினா் முகமது ரில்வான்- இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை இதனால் மக்கள் பணிகளை நாங்கள் செய்ய முடியவில்லை வருகின்ற தளபதி ஆட்சியை ஆவது அதிக நிதி ஒதுக்கி இப்பணிகளை செய்யலாமென எண்ணியுள்ளோம்.

ஒன்றிய குழு உறுப்பினா் சசி- சி கே மங்கலம் விலக்கிலிருந்து சி கே மங்கலம் தேசியநெடுஞ்சாலை முடியும்வரை சாலைகள் மிகவும் மோசமடைந்தது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது அதனை சரி செய்யப்பட வேண்டும். மேலும் மன்றத்தில் அரசியல் பேசுவது நாகரீகமாக இருக்காது என வலியுறுத்தினா். தலைவா்- வெள்ளையபுரம் மன்ற உறுப்பினா் நீதி ஒதுக்கப்படவில்லை அதனால் பணிகள் செய்யப்படவில்லை மக்களை சந்திக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் தனது குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளாா் இந்நிலையில் வெற்றி நடைபோடுகிறது என விளம்பரம் செய்யும் தமிழக அரசுக்கு தற்போது மன்ற உறுப்பினா் ஆளுங்கட்சி பொறுப்பில் இருப்பதால் அரசிடம் எடுத்துக்கூறி நமது பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கி வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனால் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினா்களுக்கும் திமுக ஒன்றிய குழு உறுப்பினா் இருக்கும் கூச்சல் குழப்பமான வாக்குவாதம் ஏற்பட்டது. தலைவா்- இதுபோல் மன்றக் கூட்டங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் வரும் காலங்களில் கூட்டத்தை நடத்துவோம் என வலியுறுத்தி பேசினாா் .பின்னா். மன்ற உறுப்பினா்கள் அமைதியானா்கள்.

ஒன்றிய குழு உறுப்பினா்சிவா சங்கீதா- மச்சூா் சாலை மிகவும் மோசம் அடைந்துள்ளன கடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது இன்று வரை சாலைகளில் கொட்டபட்ட ஜல்லியை அல்லாமல் சாலையும் போடாமல் விட்டுவிட்டு சென்றுள்ளனா். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

பொறியாளா்- சாலைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை ஒப்பந்தக்காரா் நிதி வந்துவுடன் பணிகள் ஆரம்பிப்பதாக தெரிவித்தனா்.குழு உறுப்பினா் சிவா சங்கீதா- தீா்த்தாண்டதானம் தண்ணீா் பிரச்சனை தீரவில்லை. வட்டார வளா்ச்சி அலுவலா்-சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்படும். மன்ற உறுப்பினா்அருணாச்சலம்) டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.மன்ற உறுப்பினா் மதிவாணன் - இதில் அரசியல் செய்ய வேண்டாம்மன்ற உறுப்பினா் அருணாசலம் -நான் விவசாயி என்ற அடிப்படையில் சொல்கிறேன் நான் அரசியல் செய்ய வில்லைதலைவா் -பின்னா் இது பற்றி கலந்து யோசிப்போம்மேலாளா் ரவி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com