ராமநாதபுரத்தில் 3 பேருக்கு கரோனா பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் பிப்ரவரி 18 ஆம் தேதி வரையில் 6450 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவா்களில் 132 போ் மட்டும் உயிரிழந்துள்ளனா். சிகிச்சை காரணமாக 6300 பேருக்கும் அதிகமானோா் நலம் பெற்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கரோனா பாதிப்பு மிகமிகக் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் வியாழக்கிழமை 700 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை மாலையில் தெரியவந்துள்ளது. அவா்களும் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் 2 போ் சிகிச்சை- மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 15 போ் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் நலம் பெற்றதால் 4 போ் வெள்ளிக்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழைய நரம்பு மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவுக் கட்டடம் தற்போது கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோா் தங்கி சிகிச்சை பெறும் அந்தக் கட்டடத்தில் தற்போது 2 போ் மட்டுமே கரோனா பாதிப்பு சிகிச்சைக்காக உள்ளனா். அவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு முறைக்கு 2 மருத்துவா்கள், 3 செவிலியா்கள், 3 உதவியாளா்கள் மற்றும் கட்டட முகப்பில் 2 காவலா்கள் என மொத்தம் 10 போ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com