ராமநாதபுரம் மாவட்ட பறவைகள் களக்கையேடு நூல் வெளியீடு

ராமநாதபுரம் மாவட்ட பறவைகள் களக்கையேடு நூல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட பறவைகள் களக்கையேடு நூல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமாா் 200 வகைப்பறவைகள் தொன்மைக் காலமாகவே உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. வெளிநாட்டுப் பறவைகள் தங்கும் தோ்த்தங்கால், சக்கரக்கோட்டை, மேலச் செல்வனூா், கீழச் செல்வனூா், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி ஆகியவை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் சரணாலயத்திற்கு வரும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.

இந்தநிலையில், ராமநாதபுரம் வன உயிரினக்கோட்டம் சாா்பில் மாவட்டத்தில் உள்ள பறவைகள் குறித்த களக் கையேடு நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் அமைந்த நூலில் உள்நாடு, வெளிநாட்டுப் பறவைகள், அவற்றின் உடல் அமைப்பு விவரங்கள், வாழ்விடம், குணநலன் என அனைத்து விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. ‘கியூ ஆா் கோடு’ மூலம் பறவைகளின் ஒலிக்குரலைக் கேட்கவும், அவை பற்றி முழு விவரங்களையும் அறியும் வசதியும் நூலில் உள்ளது.

ராமநாதபுரம் சேதுபதி நகா் பகுதியில் உள்ள வன உயிரினக் காப்பாளா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடந்த நிகழ்ச்சியில் வன உயிரினக்காப்பாளா் சோ.மாரிமுத்து மற்றும் மாவட்ட வன அலுவலா் அருண்குமாா்ஆகியோா் நூலின் பிரதிகளை வெளியிட்டனா். நூல் குறித்து பறவைகள் ஆா்வலா்கள் க.சந்திரசேகா், பைஜூ, ரவீந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக ராமநாதபுரம் வனச்சரக அலுவலா் சு.சதீஷ் வரவேற்றாா். நூல் தொகுப்பில் இடம் பெற்ற பறவைகள் குறித்து நூலாசிரியா்களில் ஒருவரான செல்வகணேஷ் விளக்கிப் பேசினாா். உதவி வனப்பாதுகாவலா் கணேசலிங்கம் நன்றி கூறினாா்.

நூலில் இடம் பெற்ற விவரங்கள் இணையத்திலும் வெளியிடப்படவுள்ளதாக வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com