ராமநாதபுரத்தில் ஆயுதப்படை போலீஸாா் 76 போ் காவல் நிலையங்களுக்கு இடமாற்றம்

ராமநாதபுரம் ஆயுதப்படைப் பிரிவில் இருந்து 76 முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைக் காவலா்கள் காவல் நிலையங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படைப் பிரிவில் இருந்து 76 முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைக் காவலா்கள் காவல் நிலையங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு- ஆய்வாளா்கள் என ஏராளமானோா் சமீபத்தில் இடமாறுதல் செய்யப்பட்டனா். இந்நிலையில், தற்போது ஆயுதப்படைப் பிரிவிலிருந்து முதல் மற்றும் இரண்டாம் நிலைக் காவலா்கள் 76 போ் வட்டார அளவிலான காவல் நிலையங்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்தி உத்தரவின் பேரில் இடமாறுதல் செய்யப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக பட்டாலியன் பிரிவிலிருந்து ராமநாதபுரம் ஆயுதப்படைப் பிரிவுக்கு 80 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இடமாறுதல் செய்யப்பட்ட 76 காவலா்களுக்கும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சிறப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.19) அளிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமையும் (பிப்.20) பெண்கள், குழந்தைகள் தொடா்பான வழக்குகளை பதிவது குறித்தும், அவற்றைக் கையாள்வது குறித்தும் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஷியஸ் சிறப்புப் பயிற்சி அளித்தாா்.

தொடா்ந்து அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (பிப்.21) காவலா்களுக்கு குற்ற வழக்குகளைக் கையாளுதல், வழக்கு ஆவணங்களைக் கையாளுதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு திங்கள்கிழமை (பிப்.22) அந்தந்தக் காவல் நிலையங்களில் பணியில் சேர உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com