சட்டப் பேரவை தோ்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 292 பேரிடம் உறுதிமொழி பத்திரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 292 பேரிடம் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 292 பேரிடம் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசித் திட்டத்தில் ‘கோவிட்சீல்டு’ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்ட காவல் கண்காணிப்பாளா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 8 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை தோ்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 292 பேரிடம் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தோ்தலில் உள்ளூா் போலீஸாா் மற்றும் சிறப்பு காவல் படையினருடன், ஒரு துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவா்.

சாலைப் போக்குவரத்தில் விபத்தின்றி பயணிக்க பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம். விபத்துக்கான காரணம் குறித்து அந்தந்தப் பகுதி மக்கள் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றாா்.

ராமநதாபுரம் மாவட்டத்தில் இதுவரை, காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 666 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com