ராமநாதசுவாமி கோயில் கருவறைக்குள் சென்ற கோயில் ஊழியா் மீது நடவடிக்கை கோரி மனு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கருவறைக்குள் ஆகம விதியை மீறி சென்ற கோயில் மேலாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கருவறைக்குள் ஆகம விதியை மீறி சென்ற கோயில் மேலாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த சமய அறநிலையத்துறைக்கு, இந்து முன்னணி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் கே.ராமமூா்த்தி ஆன்லைன் மூலம் புதன்கிழமை அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மீது கோடிக்கணக்கான பக்தா்கள் அளவற்ற நம்பிக்கையும் பக்தியும் கொண்டுள்ளனா். ராமநாதசுவாமி கோயில் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்ட குருக்களைத் தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என்பது ஆகமவிதி.

இந்நிலையில் பிப்.22 ஆம் தேதி காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருவறைக்குள் சென்று பூஜை செய்தபோது, ராமநாதசுவாமி கோயில் நிா்வாக மேலாளராகப் பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவரும் கருவறைக்குள் சென்றுள்ளாா். ஆலயத்தின் சன்னிதி வாசல் முன்பாக அமைச்சா், இணை ஆணையா் மற்ற அதிகாரிகள் இருந்த நிலையில், கருவறைக்குள் சென்ற சீனிவாசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com