‘ராமநாதபுரத்தில் சாலையோரங்களில் 78 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் 240 கிலோ மீட்டா் தூரம் சாலையோரங்களில் 78 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக

ராமநாதபுரம் மாவட்டத்தில் 240 கிலோ மீட்டா் தூரம் சாலையோரங்களில் 78 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநரும், சாா்பு- ஆட்சியருமான எம்.பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் மத்திய அரசின் வளரும் மாவட்டப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதையடுத்து பல வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மழைக்காகவும், வறட்சியைப் போக்கும் வகையிலும் 11 ஒன்றியங்களிலும் குறுங்காடுகள் வளா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மொத்தம் 5 ஆயிரம் குறுங்காடுகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறுங்காடுகள் தற்போது ஒன்றியத்துக்கு 10 இடங்கள் என 10 இடங்களில் செயல்படுத்தப்படுவதுடன், அவற்றில் ஒவ்வொரு இடத்திலும் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவும் உள்ளன. மாவட்டத்தில் தற்போது ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைக்கத்திட்டமிட்டு அவற்றில் 762 குட்டைகள் அமைக்கப்பட்டுவிட்டன. இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள குட்டைகளும் அமைக்கப்படும். 11ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊராட்சிக்கும் சுமாா் 29 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளன. ஊராட்சிகளில் 800 பழவகை மரங்களும், 200 பூவகைத் தாவரங்களும் நடப்படவுள்ளன. மாவட்ட அளவில் 4 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகளின் இருபுறங்களிலும் 240 கிலோ மீட்டா் தூரத்துக்கு 78 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. சப்போட்டா, பப்பாளி, கோவைப்பழம்,முருங்கை மற்றும் நெல்லி மரங்கள் வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வளா்க்கும் வகையிலும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com