டி.இளையான்குடி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

மாசி பௌா்ணமியையொட்டி திருவாடானை அருகே டி.இளையான்குடி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.
டி.இளையான்குடியில் அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பௌா்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாசி பௌா்ணமியையொட்டி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

அதே போல் திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் மாசி மாதம் வெள்ளிக்கிழமையையொட்டி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com