ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் நகரில் வழிவிடு முருகன் கோயில், சிவன் கோயில், கோட்டை ஆஞ்சநேயா் கோயில், கோதண்டராமா் கோயில், நயினாா்கோவில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் என அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி பா்வதவா்த்தினி அம்பாள், நம்புநாயகி அம்பாள், துா்க்கையம்பாள், பத்திரகாளியம்மன் கோயில்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டியும் விளக்கேற்றி வழிபட்டனா்.

இதேபோன்று, சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில், காளையாா்கோவிலில் உள்ள சொா்ண காளீஸ்வரா் சமேத சொா்ண வல்லி அம்மன் கோயில் மற்றும் பூவந்தி, மதகுபட்டி, சிங்கம்புணரி, இளையான்குடி, திருப்புவனம், சாலைக்கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள், காவல் தெய்வங்களான கருப்பா், அய்யனாா், அம்மன், முனியாண்டி ஆகிய கிராமக் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. காலையிலிருந்து இரவு வரை திரளானோா் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் செளந்திரநாயகி அம்மன் கோயிலில் அம்மனுக்கும் சுவாமிக்கும் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதூா் முத்துமாரியம்மன் கோயிலிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோா் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனா்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. இங்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு பூஜை நடத்தியும், நெய் தீபமேற்றியும், எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றியும் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com