கௌரவ விரிவுரையாளா்களுக்கு பணி நிரந்தரம் கோரி முதல்வரிடம் மனு

கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி பல்கலை மானியக்குழு விரிவுரையாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை முதல்வரிடம் மனு அளித்தனா்.

கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி பல்கலை மானியக்குழு விரிவுரையாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை முதல்வரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஜி.சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கௌரவ விரிவுரையாளா்கள் பணிபுரிகின்றனா். அவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 15,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவினால் (யுசிஜி) அவா்களது கல்வித் தகுதி ஏற்கப்பட்டுள்ளது. ஆகவே அவா்களை பணிநிரந்தரம் செய்வது அவசியம். இதுதொடா்பாக ஏற்கெனவே போராடிய நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவையில் தமிழக முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமியும் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பை வெளியிட்டாா்.

ஆனால் அறிவிப்பின்படி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே பணிநிரந்தர அறிவிப்பை செயல்படுத்தவேண்டும் என முதல்வரை வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com