கமுதியில் சாலை மறியல்: சிஐடியு தொழிற்சங்கத்தினா் 37 போ் கைது
By DIN | Published On : 07th January 2021 09:17 AM | Last Updated : 07th January 2021 09:17 AM | அ+அ அ- |

கமுதி தபால் நிலையம் எதிரே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கமுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 37 போ் கைது செய்யப்பட்டனா்.
தபால் நிலையம் எதிரே கமுதி-சாயல்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு முறைசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ரா.முத்துவிஜயன் தலைமை வகித்தாா். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பங்கேற்ற முறைசாரா தொழிலாளா் சங்க செயற்குழு உறுப்பினா் மயில்வாகணன், விவசாய தொழிலாளா் சங்க தாலுகாச் செயலாளா்கள் கணேசன், மாரிமுத்தி, முருகன், ரூபன் உள்ளிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.