மாா்கழி அஷ்டமி தின வீதியுலா ரத்து: இந்து மக்கள் கட்சியினா் போராட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாா்கழி மாத அஷ்டமி தின வீதியுலா ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 9 போ் கைது செய்தனா்.
ராமநாதசுவாமி கோயில் அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாத அஷ்டமி தினத்தையொட்டி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் தங்க ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்ற நிலையில், வீதி உலா ரத்து செய்யப்பட்டது.

இதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் மாநில இளைஞரணிச் செயலாளா் சரவணன், மாவட்டத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கோயில் அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளா் குருசா்மா, ஒன்றியச் செயலாளா் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com