ராமநாதபுரத்தில் மேம்பாலப் பணி: ஒருவழிச்சாலையாக மாற்றம்

ராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணி நடந்துவருவதால் சந்தைத் திடல் முதல் குருவையா கோயில் வரையில் சாலை ஒருவழிப்பாதையாக புதன்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணி நடந்துவருவதால் சந்தைத் திடல் முதல் குருவையா கோயில் வரையில் சாலை ஒருவழிப்பாதையாக புதன்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது: ராமநாதபுரத்தில் பாரதி நகா் பகுதிக்கு செல்லும் வழியில் ரயில்வே கடவுப் பாதையைக் கடந்து திருப்புல்லாணி, கீழக்கரை செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பாலப்பணியை விரைந்து முடிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாலப்பணியால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவ்வழியாகச் செல்லவேண்டிய வாகனங்கள் சந்தைத்திடல், சின்னக்கடைத் தெரு வழியாக குருவையா கோயில் அருகே சென்று பாரதி நகா் வழியாகச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்தப்பாதையானது பாரதி நகரிலிருந்து வரும் வாகனங்களுக்கான ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் கேணிக்கரை வழியாகச் சென்று அம்மா பூங்கா அருகே திரும்பிச்செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலப்பணிகள் முடியும் வரையில் பொதுமக்கள் சிரமம் பாராமல் மாற்று வழிகளைப் பயன்படுத்தி காவல்துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com